Monday, February 1, 2010

இடுகையும் இட்டவரும்! ஜீவன் சிவத்துக்கு ஒரு மறுமொழி!

நான் பின்னூட்டங்கள் பலபதிவுகளில் இட்டுவருகிறேன். எங்கு பாராட்ட வேண்டுமோ அங்கு செய்து, எங்கு குறைகளச் சுட்டிக்காட்ட வேண்டுமோ அங்கு அதையும் செய்து வருகிறேன். பாராட்டை ‘லபக்’கென்று விழுங்கியவர்கள், குறைகளைச் சொன்னவுடன் ‘அதை மேதாவித்தனம்’ என்று விமர்சிக்கிறார்கள்.

இருநாட்களாக ஜீவன் சிவன் என்பவரின் வ்லைபதிவில் எனக்கு இதுதான் நேர்ந்தது. இன்னொரு வலைபதிவிலும் நேர்ந்தது அது ஈரோடு கதிரின் வலைப்திவில் - அதைப்பற்றி தனி இடுகை வேண்டும். இங்கே ஜீவன் சிவனின் கருத்தை மட்டும் பார்ப்போம்.

இதற்குமுன் ஒரு பொதுக்கருத்து, யாதெனில், பின்னூட்டமிடுவோர் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசச்சொற்களால் இடுவது கண்டனத்துக்குரியது. இதில் இருகருத்துகளுக்கு இடமில்லை.

இதுவல்ல பிரச்ச்னை ஜீவன் சிவத்துக்கு. அவரின் கருத்துப்படி, (’கொம்பு முளைத்த சில பதிவர்கள்” என்ற அவரின் இடுகையைப்பார்க்கவும்) இடுகை வேறு, இட்டவர் வேறு. பின்னூட்டமிடுவர் உணர்ச்சிகளைக்காட்டக்கூடாது. பின்னூட்டமிடுப்வர்கள், பதிவாளருக்குப் பிடிக்கா வண்ணமிடுவாராயின், அவர்கள் ‘அழையா விருந்தாளிகள்’

இக்கருத்துகளைப்பார்ப்போம்:

அழையா விருந்தாளிகள் என்றால், என்ன பொருள்?

பதிவர்கள் அழைத்தவர் மட்டுமே பின்னூட்டமிடவேண்டும். இது சாத்தியம்தான். பதிவுகளில் ‘என் வலைபதிவில் பதிவு (ரிஜிஸ்தர்) பண்ணியவர்களே நுழைந்து படித்து பின்னூட்டமிடலாம்’ இதில் யாரை ஏற்றுக்கொள்வது, யாரை மறுப்பது என்பது பதிவாளரின் தன்னிச்சை. இப்படி யான் சில பதிவர்களிடம் கண்டதுண்டு. எடுத்துக்காட்டு: தேசிகன் என்பவரின் பதிவு. அவர் அங்கு தனக்குப்பிடித்தவர்களை மட்டும் அனுமதிப்பார். இத்ற்கு காரணம் அவர் ஒரு வைதீக பார்ப்பனர்; வைதீக மதக்கருத்துகளை அவர் எழுதுவது, இந்த் so-called திராவிட பதிவர்களோ, அல்லது இந்த so-called பார்ப்பன எதிர்ப்பாளர்களோ உள்ளுழைந்து அவரை சரமாரியாகத் திட்டி பின்னூட்டமிடுவார்கள் என அச்சம் கொண்டு அப்படி செய்கிறார். இதனாலேயே, அவர் தன்னை தமிழ்மணத்தில் விளம்பரம் செய்வதில்லை.

தமிழ்மணத்தில் வழியாக பிறர் கவனத்தைக்கவருவோர், இப்படி இது என் நண்பர்களுக்காக மட்டும் எனச் சொல்லி இடுகை இடலாமா? ஆமென்றால், அது தமிழ்மணத்திரட்டியைத் துர்பிரயோகம் பண்ணுவதாகும்.

தமிழ்மணத்தில் வருபவை திறந்த நூல்களைப்போலிருக்க வேண்டும். அவற்றை எவரும் படித்து இன்புறலாம்; அல்லது, ‘சே’ வெனத் தூக்கி எறியலாம். பின்னூட்டமிட்டு தன் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

இங்கு அழையா விருந்தாளிகளாக வந்து பின்னூட்டமிடுகிறார்கள் என்று ஏன் அலற்வேண்டும்? பின்னூட்டமிடுவர் அருவருப்பாக இடுகிறார் என்றால், அதைத் தடுக்க கருவி உள்ள்தே? ‘அருவருப்பு’ என்றால் என்ன? ஆபாசச்சொல் என்றாலோ, அல்லது தனிப்பட்ட முறையில் பதிவரைத் திட்டினாலோ, அருவருப்பு எனலாம். ஆனால், மாறுபட்ட கருத்தை ‘அருவருப்பு’ என்றால், நீஙக்ள் ஏன் பொதுயிடமாக தமிழ்மணத்திரட்டியில் இடுகிறீர்கள்?

இப்பதிவு நீண்டதால், என் அடுத்த பதிவில் ஜீவனின் ‘இடுகை வேறு: இட்டவர் வேறு’ என்ற வாதத்தை எடுப்போம்.

1 comment:

  1. :) என்னதான் பிரச்சினை எனப் பார்த்துவிடலாம். உங்களுடைய பின்னூட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது நான் அறிந்தது.

    ReplyDelete

Followers