Friday, September 11, 2009

திராவிடப்பதிவர்களும், ஆரியப்பதிவர்களும்!



ஒரு சில மாதங்களாக நான் வலைபதிவுகள் தொடர்ந்து படித்து வருகிறேன். சில சுவையானவை. சில கரிப்பானவை. இனிப்பும் கரிப்பும் கலந்ததுதானே வாழ்க்கை ?


சாதிப்பிளவுகள் உண்டு நம் தமிழ்நாட்டுமக்களிடையே. ஆனாலும் மக்கள் ஒன்றாகத்தான் வாழ்கின்றனர். அஃதாவது, அவரவர் இனக்கூட்டத்திடையே. பிறரிடம் பழகும்போது, நல்லவராயிருப்பின், நன்றாக, மற்றவராயிருப்பின் பட்டும்படாமலுமாக. இப்படியாக மக்கள் வாழ்க்கையோடிக்கொண்டிருக்கிறது. இதற்கு, இன்னொரு கரணியம், நேருக்குநேர் எனவரும்பொழுது, தங்கள் கரிப்பைத் தமக்குள்ளே வைத்துக்கொள்வர். அதுவும் சரிதான். சகிப்புத்தன்மையே அது.


எங்கு நேருக்குநேர் என வராதோ, அங்கு, இத்தன்மை ஓடிப்போய், தன் ஆழ்மன வெறுப்பு திறந்து காட்டப்படுகிறது.

வலைபதிவாளர்கள் இனக்குழு மனப்பானமை அப்படித்தான். ஆனாலும், இங்கு ஒரு சிறப்பு என்னவெனில், பல பிரிவுகள் வெளிச்சமூகத்தில் இருக்கின்றன. தெரிகின்றன. இங்கோ, இரண்டே இரண்டுதான். பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோர்.


தற்போது, யுவகிருஷணா என்பவருக்கு எதிராக இன்னொருவர் (தமிழ் எண்ணங்கள்) எழுதியிருந்ததை படித்தபோது, அப்பதிவாளர், இவரை, திராவிடப்பதிவர்கள் கூட்டத்தலைவர் என எழுதுகிறார். அப்பதிவாளரும் அவருடன் யாவர் எனப் பார்த்தபோது, அவர்கள் அனைவரும் பார்ப்பனப்பதிவர்கள் என வருகிறது.


மேலும், ஆராய்ந்தபோது, எனக்குத் தெரிய வந்தவை இவை:


திராவிடப்பதிவர்கள் என்றால்:


1. பெரியாரைப் போற்றுபவர்

2. திராவிடக்கட்சிகளையும் தலைவர்களையும் முழுக்கமுழுக்க சரியெனச் சொல்லாவிட்டாலும், கடுமையாக விமர்சனம் செய்ய மாட்டார்.

3. பெரியார்தொண்டர்களென்றால், இந்துமதம் முழுக்கமுழுக்க வெறுக்கப்படவேண்டிய ஒன்று.

4. மற்றவர்கள், தமிழ், தமிழர்கள், தமிழர் பண்பாடு, தமிழரின் பாரம்பரியம் என்பவைகளை போற்றுவார். நையாண்டியோ, கேலியோ பண்ணுவதில்லை.

5. தமிழறிஞர்களைப் போற்றுவார்.

6. இந்துக்களாயிருப்பினும், வடமொழிச்சொற்களை ஆங்காங்கே

ஏற்றுக்கொள்ளினும் கூட, தமிழ் வாழ்க, வடமொழி ஒழிக என்பார்.


பார்ப்பனப்பதிவர்கள் என்றால்:


1. வடமொழியே கோயிலில் புழங்கவேண்டும்.

2. வடமொழியில்லாமல் தமிழ் இல்லை.

3. தனித்தமிழ் என்றாலே இவருக்குப் பற்றிக்கொண்டுவரும்.

4. பெரியார் பரம எதிரி.

5.பெரியாருக்கு கொள்கை, பார்ப்பனத்துவேசத்தைத் தவிர வேறெதுவுமில்லை.

6. திராவிடம் என்ற சொல்லே ஆகாது.

7. ஆரியர்கள் என வெளியில் சொல்லார். ஆயினும் ஆங்காங்கே அச்சொல் தலைதூக்கும். திராவிடப்பதிவர் என அவரைச் சொன்னால் இவர் திராவிடப்பதிவர் இல்லையென்றாகிறது.

8. மூடநம்பிக்கை சாடப்பட்டால், அது இந்துமதத்தைச் சாடப்பட்டாதாகும் இவருக்கு.

9. இந்து மதம் சாடப்பட்டால், பார்ப்பனர் சாடப்பட்டதாகும் இவருக்கு. வருணக்கொள்கை சரி எனச் சாதிப்பார். அப்போத்துதானே, தன்னைப் பிராமணன் எனக்கூறிக்கொள்ள முடியும்!

10. இவையனைத்தும், பார்ப்பனத்துவேசமாகும்.

11. நாத்திக வாதம் பார்ப்பனத்துவேசமாகும்.

12. இவர் வலைபதிவுகளில், பாரதியார் படம் இருக்கும்.

13. இவரைப்பொறுத்தவரை பாரதியார் தமிழரின் கவிஞரல்ல. அவர் பார்ப்பனத்திலகம் எனவே, அவரைப் பெருமையுடன் நோக்குவார்.

14. இவர் வலைபதிவுகளின், இந்துத்துவா வலைபதிவர்களுக்கு தொடர் கொடுத்துவிடுவார்.

15. இந்து புனிதர்கள் அனைவரும் இந்துத்தீவரவாதிகள் என நினைப்பின்படி, அரவிந்தர் எழுத்துகளையும் படத்தையும் போட்டு, மற்றமதததினரை வசைபாடுவார்.

16. தேசியம் பேசுவார். நாட்டுப்பற்று மிகவும். திராவிடபதிவர்கள் நாட்டைக்காட்டிக்கொடுப்போர் என வசைபாடுவார்.

17. இவர் பின்னூட்டங்கள் இவரைப் போன்றோரின் வலைபதிவுகளிலேயே நிகழும்.

18. ஒருவருக்கொருவர் துணை.

19. அவர்கள் மட்டுமே தமக்குள் சிலாகித்துப்பேசிக்கொள்வர்.

20. இவரின் கொள்கைகளை ஏற்ற பார்ப்பனரல்லாதோர் இவரால் மதிக்கப்படுவார்கள்.

(இன்னும் நிறைய சொல்லலாம். போதும்.)

இவ்விரு குழுக்கள் தாண்டி மற்றவர் உண்டு. அவர்களைப் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை.

பதிவர்கள் அனைவரும் நல்ல கல்வி கற்று நல்ல பதவிகளிலும் இருப்பவர்கள்.

இதைப்படித்துவிட்டு என்னை திராவிடபதிவருள் இவர் ஒருவர் என்று முத்திரையிடப்பட்டால் வியப்பொன்றுமில்லை.

Followers