Friday, September 11, 2009

திராவிடப்பதிவர்களும், ஆரியப்பதிவர்களும்!



ஒரு சில மாதங்களாக நான் வலைபதிவுகள் தொடர்ந்து படித்து வருகிறேன். சில சுவையானவை. சில கரிப்பானவை. இனிப்பும் கரிப்பும் கலந்ததுதானே வாழ்க்கை ?


சாதிப்பிளவுகள் உண்டு நம் தமிழ்நாட்டுமக்களிடையே. ஆனாலும் மக்கள் ஒன்றாகத்தான் வாழ்கின்றனர். அஃதாவது, அவரவர் இனக்கூட்டத்திடையே. பிறரிடம் பழகும்போது, நல்லவராயிருப்பின், நன்றாக, மற்றவராயிருப்பின் பட்டும்படாமலுமாக. இப்படியாக மக்கள் வாழ்க்கையோடிக்கொண்டிருக்கிறது. இதற்கு, இன்னொரு கரணியம், நேருக்குநேர் எனவரும்பொழுது, தங்கள் கரிப்பைத் தமக்குள்ளே வைத்துக்கொள்வர். அதுவும் சரிதான். சகிப்புத்தன்மையே அது.


எங்கு நேருக்குநேர் என வராதோ, அங்கு, இத்தன்மை ஓடிப்போய், தன் ஆழ்மன வெறுப்பு திறந்து காட்டப்படுகிறது.

வலைபதிவாளர்கள் இனக்குழு மனப்பானமை அப்படித்தான். ஆனாலும், இங்கு ஒரு சிறப்பு என்னவெனில், பல பிரிவுகள் வெளிச்சமூகத்தில் இருக்கின்றன. தெரிகின்றன. இங்கோ, இரண்டே இரண்டுதான். பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோர்.


தற்போது, யுவகிருஷணா என்பவருக்கு எதிராக இன்னொருவர் (தமிழ் எண்ணங்கள்) எழுதியிருந்ததை படித்தபோது, அப்பதிவாளர், இவரை, திராவிடப்பதிவர்கள் கூட்டத்தலைவர் என எழுதுகிறார். அப்பதிவாளரும் அவருடன் யாவர் எனப் பார்த்தபோது, அவர்கள் அனைவரும் பார்ப்பனப்பதிவர்கள் என வருகிறது.


மேலும், ஆராய்ந்தபோது, எனக்குத் தெரிய வந்தவை இவை:


திராவிடப்பதிவர்கள் என்றால்:


1. பெரியாரைப் போற்றுபவர்

2. திராவிடக்கட்சிகளையும் தலைவர்களையும் முழுக்கமுழுக்க சரியெனச் சொல்லாவிட்டாலும், கடுமையாக விமர்சனம் செய்ய மாட்டார்.

3. பெரியார்தொண்டர்களென்றால், இந்துமதம் முழுக்கமுழுக்க வெறுக்கப்படவேண்டிய ஒன்று.

4. மற்றவர்கள், தமிழ், தமிழர்கள், தமிழர் பண்பாடு, தமிழரின் பாரம்பரியம் என்பவைகளை போற்றுவார். நையாண்டியோ, கேலியோ பண்ணுவதில்லை.

5. தமிழறிஞர்களைப் போற்றுவார்.

6. இந்துக்களாயிருப்பினும், வடமொழிச்சொற்களை ஆங்காங்கே

ஏற்றுக்கொள்ளினும் கூட, தமிழ் வாழ்க, வடமொழி ஒழிக என்பார்.


பார்ப்பனப்பதிவர்கள் என்றால்:


1. வடமொழியே கோயிலில் புழங்கவேண்டும்.

2. வடமொழியில்லாமல் தமிழ் இல்லை.

3. தனித்தமிழ் என்றாலே இவருக்குப் பற்றிக்கொண்டுவரும்.

4. பெரியார் பரம எதிரி.

5.பெரியாருக்கு கொள்கை, பார்ப்பனத்துவேசத்தைத் தவிர வேறெதுவுமில்லை.

6. திராவிடம் என்ற சொல்லே ஆகாது.

7. ஆரியர்கள் என வெளியில் சொல்லார். ஆயினும் ஆங்காங்கே அச்சொல் தலைதூக்கும். திராவிடப்பதிவர் என அவரைச் சொன்னால் இவர் திராவிடப்பதிவர் இல்லையென்றாகிறது.

8. மூடநம்பிக்கை சாடப்பட்டால், அது இந்துமதத்தைச் சாடப்பட்டாதாகும் இவருக்கு.

9. இந்து மதம் சாடப்பட்டால், பார்ப்பனர் சாடப்பட்டதாகும் இவருக்கு. வருணக்கொள்கை சரி எனச் சாதிப்பார். அப்போத்துதானே, தன்னைப் பிராமணன் எனக்கூறிக்கொள்ள முடியும்!

10. இவையனைத்தும், பார்ப்பனத்துவேசமாகும்.

11. நாத்திக வாதம் பார்ப்பனத்துவேசமாகும்.

12. இவர் வலைபதிவுகளில், பாரதியார் படம் இருக்கும்.

13. இவரைப்பொறுத்தவரை பாரதியார் தமிழரின் கவிஞரல்ல. அவர் பார்ப்பனத்திலகம் எனவே, அவரைப் பெருமையுடன் நோக்குவார்.

14. இவர் வலைபதிவுகளின், இந்துத்துவா வலைபதிவர்களுக்கு தொடர் கொடுத்துவிடுவார்.

15. இந்து புனிதர்கள் அனைவரும் இந்துத்தீவரவாதிகள் என நினைப்பின்படி, அரவிந்தர் எழுத்துகளையும் படத்தையும் போட்டு, மற்றமதததினரை வசைபாடுவார்.

16. தேசியம் பேசுவார். நாட்டுப்பற்று மிகவும். திராவிடபதிவர்கள் நாட்டைக்காட்டிக்கொடுப்போர் என வசைபாடுவார்.

17. இவர் பின்னூட்டங்கள் இவரைப் போன்றோரின் வலைபதிவுகளிலேயே நிகழும்.

18. ஒருவருக்கொருவர் துணை.

19. அவர்கள் மட்டுமே தமக்குள் சிலாகித்துப்பேசிக்கொள்வர்.

20. இவரின் கொள்கைகளை ஏற்ற பார்ப்பனரல்லாதோர் இவரால் மதிக்கப்படுவார்கள்.

(இன்னும் நிறைய சொல்லலாம். போதும்.)

இவ்விரு குழுக்கள் தாண்டி மற்றவர் உண்டு. அவர்களைப் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை.

பதிவர்கள் அனைவரும் நல்ல கல்வி கற்று நல்ல பதவிகளிலும் இருப்பவர்கள்.

இதைப்படித்துவிட்டு என்னை திராவிடபதிவருள் இவர் ஒருவர் என்று முத்திரையிடப்பட்டால் வியப்பொன்றுமில்லை.

23 comments:

  1. நீங்க பழைய பதிவரா! புதிய பதிவரா அண்ணாச்சி?

    ReplyDelete
  2. //SUREஷ் (பழனியிலிருந்து) said...
    நீங்க பழைய பதிவரா! புதிய பதிவரா அண்ணாச்சி?
    //

    -:)

    ReplyDelete
  3. தங்களுடைய ஆராய்ச்சியை கண்டேன் ஐயா! இன்னும் கொஞ்சம் ஆழமாக, விரிவாகப் போக வேண்டும்! அப்போதுகூட, உங்களால் என்ன கண்டுபிடித்தேனென்று உறுதியாகச் சொல்ல முடியுமோ, முடியாதோ தெரியவில்லை!

    இருந்தாலும் இந்தச் சுட்டி, உங்களுக்கு வெறுப்போடு உரையாடுதல் எப்படி என்பதை இன்னும் கொஞ்சம் விளக்கிச் சொல்லக்கூடும்!

    http://jeyamohan.in/?p=2760

    ReplyDelete
  4. சுரேஷ், பித்தன்!

    நான் தமிழில் தனிநபர் வலைபதிவுகள் வாசிப்பதில் புதியவன். இணையத்தில் மற்ற விசயங்களைத் தேடிப் படிப்பதுண்டு.

    கூட்டத்தில் சேர்ந்து கூவிப்பிதற்றலை என்றும் விரும்புவதில்லை.

    ReplyDelete
  5. கிருஷ்ணமூர்த்தி!

    ஜயமோகனிடம், குரு போட்ட கேள்வியை மட்டும் படித்தேன். ஜயமோகன் எழுதியதை இன்னும் படிக்கவில்லை. மிகவும் நீளம், இல்லையா? நிறைய நேரம் தேவை. படித்தவுடன் என் கருத்துகளைப்போட விருப்பம்.

    ReplyDelete
  6. படித்துமுடித்தேன்.

    குரு கேட்டது இது::

    நான் இந்திய தேசிய்வாதி. ஆனால் தேசிய்த்தை வெறுக்கிறார்கள். நான் காந்திய் அஹிம்சாவழி சரியென்கிறேன். அவர்கள் தவறெனவும் சொல்கிறார்கள். உங்கள் கருத்தென்ன?

    (குரு ஜயமோகன், தேசியத்தைச் சரியெனவும், காந்தியத்தைச் சரியெனவும், அதற்கு மாறுபட்டகருத்தாளரை க்டும்விமர்சனம் செய்வார் என எதிர்பார்த்தே கேட்டிருக்கிறார். அவர் எதிர்பார்ப்பு வீணாகவில்லை)

    ஜய்மோகனின் பதில்:

    வெறுப்பு என்பது ஒரு மனித உணர்ச்சி. சிலர் அதை ருசித்து வாழ்கின்றனர்; ஊட்டச்சத்தாக்கி வளர்கின்றனர். இதற்கு, அவர்கள் சமூகத்தில் சில கூறுகளைத் திரித்து தமதாக்கி வெறுப்புண்டாக்கி மக்களை அலைகழித்து இன்புறுகின்றனர். எனவே குரு அவர்களைச் சட்டைபண்ணாதீர்கள். நீங்களே சரி. அவர்கள் தவறு.

    காந்தியம் தோற்கவில்லை. ஆயுதப்புரட்சிதான் தோற்றது. காந்தியவழியில் சென்ற புரட்சியாளர்களே வென்றனர். எடுத்துக்காட்டு: நெல்சன் மண்டேலா.

    இதற்கும் நான் எழுதிய பதிவுக்கும் என்ன தொடர்பு கிருஷ்ணமூர்த்தி.?

    ReplyDelete
  7. போடா லூசு வயசான காலத்துல உருப்படற வழியை பாரு

    ReplyDelete
  8. Anonymous friend!

    அறிவுரை தள்ளுபடி செய்யப்பட்டது.

    எனினும், எழுதியதற்கு நன்றி.

    ReplyDelete
  9. சுரேஷ், ஞானப்பித்தன்

    நன்றி.

    இணையம் பலவருடங்களாகப்பழக்கம். ஆனால், வலைப்திவெழுத விழைந்தது த்ற்போதுதான். தமிழ்மணத்தில் பலபதிவர்களைப் படிக்கத் தொட்ங்கியது எனக்கு முதலில் தென்பட்டது, இந்த ஆரிய்-திராவிடச்ச்ண்டையே. எனவே அதை முதல் முதலாகப்போட்டேன்.

    ReplyDelete
  10. ஐயா,

    சிறப்பான ஆராய்ச்சி ! ஆதி (ஆரிய - திராவிட) பற்றி நல்ல தொகுப்பு !
    :)

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. வித்தியாசமான அணுகுமுறை. அருமையான ஆராய்ச்சி. ஆழ்ந்த பார்வை. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். தங்களின் அணுகுமுறை Objective ஆக இருப்பதாகவே நான் பார்க்கிறேன்.

    ReplyDelete
  13. pls read my blog and send ur address if you like, thanking you !

    ReplyDelete
  14. அய்யா உங்களது இடுகை படித்தேன்.
    நான் உங்களை வாழ்த்த எனக்கு வயது பத்தாது.
    உங்கள் இடுகை சிறப்பு ,
    அதனை விட விமர்சனங்களுக்கு தங்களது பதில் மிக சிறப்பு.

    ReplyDelete
  15. Anonymous friend!
    என்ற ஒருவருக்கு நன்றி கூறி அந்த நண்பரை அரவணைத்து அஹிம்சையை புரிய வைத்துவிட்டீர்கள்
    hats off!

    ReplyDelete
  16. Messers கோவி கண்ணன், சவுக்கு, ஜோ, புல்லட் மணி and Ms ஃபாத்திமா!

    நன்றிகள் பல.

    ReplyDelete
  17. தீதும் நன்றும் பிறர் தர வரா

    இது ஒன்றே போதும் உங்கள் மொத்த ஆளுமை?

    ReplyDelete
  18. பாரதி என்னும் மகா கவி, தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானவன்.

    அவனுக்கு சாதிச் சாயம் பூசுபவர்களை என்னவென்று சொல்வது?

    ReplyDelete
  19. கருத்துக்களை மட்டும்பார்ப்போம். அதன் நோக்கத்தை மட்டும் பார்ப்போம். தெளிவான பதிவு சார்.

    ReplyDelete
  20. அவரவர்களுக்கு சொந்தக்காரணங்கள் இருக்கின்றன அப்படிச்சாயம் பூச, ஜோ!

    ReplyDelete
  21. நன்றி மிசஸ் கண்ணகி.

    ReplyDelete

Followers